<p>காஞ்சிபுரம்: அவளூர் கிராமத்தில் பாஜக சார்பில் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தி பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. </p><p>தமிழர் திருநாளான தைத் திருநாள் பொங்கல் பண்டிகையை ஒட்டி பல்வேறு கட்சியை சேர்ந்த கட்சியினர் கிராமங்களுக்கு சென்று கிராம மக்களுடன் ஒன்றிணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் காஞ்சிபுரம் அருகே அவலூர் கிராமத்தில் 'நம்ம ஊரு மோடி பொங்கல்' கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. </p><p>நிகழ்ச்சியில் ஒரு பிகுதியாக குழந்தைகளை அழைத்து வந்து லெமன் தி ஸ்பூன், கைகளில் அள்ளிக் கொண்டு வாட்டர் பாட்டில் தண்ணீர் சேமித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விறுவிறுப்பான போட்டிகள் நடத்தப்பட்டன.</p><p>இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும் குழந்தைகளின் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் சிலம்பம் போட்டியும், பாட்டுப் போட்டி, நடனப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதில், ஏராளமான குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். </p>
