Surprise Me!

செய்யாற்றில் மணல் கொள்ளை - வெளியான வீடியோ

2026-01-13 0 Dailymotion

<p>திருவண்ணாமலை: செய்யாற்றில் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>செங்கம் நகராட்சியைச் சேர்ந்த பரமனந்தல், மண்மலை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் செய்யாற்று கரையோரம் ஆழமான கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இந்தக் கிணறுகளிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரையே அந்தந்த பகுதி மக்கள் குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மணல் கொள்ளை காரணமாக நிலத்தடி நீர் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, அந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.</p><p>இந்தப் பிரச்சினையைத் துறைசார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில், சட்ட விரோதமாக தொடர் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.</p>

Buy Now on CodeCanyon