Surprise Me!

போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

2026-01-14 0 Dailymotion

<p>காஞ்சிபுரம்: போகி பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பழைய பொருட்களை எரித்தும், மேளதாளங்கள் அடித்தும் பொதுமக்கள் கொண்டாடினர்.</p><p>தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடவுள்ள நிலையில் அதனை வரவேற்கும் விதமாக இன்று போகிப் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர். பழையன கழிதலும் புதியன புகுதலும் என போகிப் பண்டிகை நாளன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்தனர். மனதில் உள்ள தீய எண்ணங்களையும் தூக்கி எறிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>அந்த வகையில் இன்று அதிகாலை முதல் வீடுகளில் முன்பு பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர். காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளான சின்னையங்குளம், மிலிட்டரி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுவர், சிறுமியர்கள் மேளதாளங்கள் அடித்தும் போகி பண்டிகையை கொண்டாடினர். இதனால் அந்த பகுதிகளில் இன்று காலை புகைமூட்டமாக இருந்தது. </p><p>பல்வேறு பகுதிகளில் பழைய பொருட்களை தீ வைத்து எரிப்பது தடை பெய்யப்பட்டுள்ளதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பாரம்பரிய போகியை கொண்டாடினர்.</p>

Buy Now on CodeCanyon