Surprise Me!

யானை கூட்டங்கள் குளித்து மகிழ்ந்த வீடியோ வைரல்

2026-01-15 1 Dailymotion

<p>கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த பரம்பிக்குளம் அணைப்பகுதியில் யானை கூட்டமாக குளித்து மகிழ்ந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.  </p><p>பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், தூனாக்கடவு, பெருவாரி பள்ளம் போன்ற வனப் பகுதியில் புலி, யானை, காட்டுமாடு, சிறுத்தை, செந்நாய், புள்ளிமான் போன்ற வன விலங்குகள் அதிகமாக இருக்கிறது. இவற்றைக் காண்பதற்காக தமிழ்நாடு மற்றும் கேரளா வனத்துறை சார்பில் பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள். வேன் சவாரி மூலம் அனைத்து பகுதியும் சுற்றிப் பார்க்க குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்களின் வருகை இன்று காலை முதல் அதிகமாக உள்ளது. </p><p>இந்நிலையில், இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பரம்பிக்குளம் அருகே உள்ள எர்த் டேம் பகுதியில் யானைகள் கூட்டமாக நின்று குளித்து மகிழ்ந்தன. இந்த காட்சியை பார்த்த மற்றொரு பெண் யானை கரையில் இருந்து தண்ணீருக்குள் வேகமாக ஓடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. </p>

Buy Now on CodeCanyon