Surprise Me!

கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோயிலில் சிறப்பாக தைப்பொங்கல் தேரோட்டம்

2026-01-15 1 Dailymotion

<p>தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பொங்கல் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.</p><p>கும்பகோணம் கோமளவல்லி தாயார் சமேத சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று, தைப்பொங்கல் தேரோட்டத் திருவிழா. இங்கு பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இவ்விழா கடந்த 7 ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திரு வீதி உலா நடைபெற்று வருகிறது.</p><p>விழாவின் ஒன்பதாம் நாளான தை முதல் நாளான இன்று உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் உடன் விசேஷ பட்டுடுத்தி சிறப்பு மலர் அலங்காரத்தில், நாதஸ்வர மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க திருத்தேருக்கு எழுந்தருள, தேரின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டு நின்று சாரங்கா சாரங்கா என விண்ணதிர முழக்கங்கள் எழுப்பிய படி தேரினை வடம் பிடித்து இழுக்க தைப்பொங்கல் தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக சிறப்பாக நடைபெற்றது.</p><p>தேரோட்டத்தை தொடர்ந்து இன்று பகல் தீர்த்தவாரி கண்டருளிய பிறகு, உத்ராயண வாயில் திறப்பும் நடைபெற்றது. 10ஆம் நாளான நாளை 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை பெருமாள் திருவடி திருமஞ்சனம், த்வாதஸ திருவாராதனம் கண்டருளலுடன் இவ்வாண்டிற்கான தைப்பொங்கல் தேரோட்ட திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது. </p>

Buy Now on CodeCanyon