Surprise Me!

பென்னிகுயிக் பிறந்தநாள்: பொங்கல் வைத்து விழா எடுத்த பாலார்பட்டி கிராம மக்கள்

2026-01-15 7 Dailymotion

தேனி: பாலார்பட்டியில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுயிக் பிறந்த நாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, ஐந்து மாவட்ட மக்களின் தாகம் தீர்த்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் 185 ஆவது பிறந்தநாள் விழாவை பாலார்பட்டி கிராமத்தினர் தொடர்ந்து 27-ஆம் ஆண்டாக சிறப்பாக கொண்டாடினர்.

தேவராட்டம், சிலம்பம் சுற்றி ஆட்டம் பாட்டத்துடன் பாரம்பரிய முறைப்படி ஊர் மக்கள் ஒன்று கூடி, தலையில் பொங்கல் பானை சுமந்து கொண்டு அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து கிராமத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொங்கல் வைத்து “பொங்கலோ பொங்கல்” என குலவையிட்டு கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ஐந்து மாவட்ட மக்களின் தாகம் தீர்த்த பென்னிகுயிக்கை கடவுளாக போற்றி அவரது பிறந்தநாள் விழாவை எங்கள் கிராமத்தில் தொடர்ந்து 27 ஆண்டுக்காக பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தனர். இந்த விழாவில், சேலம் ஆர்.ஆர்.பிரியாணியின் நிறுவனர் தமிழ்செல்வன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

Buy Now on CodeCanyon