Surprise Me!

குன்னூரில் வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை - மக்கள் அச்சம்

2026-01-18 0 Dailymotion

<p>நீலகிரி: குடியிருப்பில் புகுந்த சிறுத்தை வீட்டு வாசலில் படுத்திருந்த வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, யானை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி குடியிருப்புப் பகுதிக்கு வருவது வாடிக்கையாகிவிட்டது. அப்படி வரும்போது, வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகள், மாடுகள், நாய்களை வனவிலங்குகள் கவ்வி செல்வதும் அதிகரித்து வருகிறது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில், குன்னூர் அருகே டெண்டில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை, மேல்மாடியில் உறங்கிக்கொண்டிருந்த வளர்ப்பு நாயை லாவகமாகக் கவ்வி கொண்டு சென்ற காட்சி அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, இது தொடர்பான வீடியோ வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதனால், குன்னூர் பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தையை நீலகிரி மாவட்ட வனத்துறையினர் கண்காணித்து, உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, சிறுத்தை நடமாட்டம் குறித்து சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.</p>

Buy Now on CodeCanyon