Surprise Me!

தை அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்

2026-01-18 3 Dailymotion

<p>தேனி: தை அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக சுருளி அருவியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.</p><p>தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ளது சுருளி அருவி. இந்த அருவியில் முப்பத்தி முன்னூரு தேவர்கள், எண்ணூறு ரிசிமார்களும் வாழ்ந்ததாக வரலாறு உண்டு. இதனால், ஆண்டு முழுவதும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, சித்திரை முதல் நாள், மாகாளி அமாவாசை போன்ற தினங்களில் சிறப்பான பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதுமட்டுமின்றி, அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு அதிகப்படியான தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.</p><p>இதற்காக, சுருளி வரும் மக்கள், மறைந்த முன்னோர்களை நினைவில் கொண்டு அவருக்காக பிரார்த்தனை மற்றும் பரிகாரங்களை செய்து, எள்ளு தண்ணீர் மற்றும் பிண்டங்களை ஆற்றில் கரைத்து செல்வர். இந்நிலையில், இன்று தை அமாவாசை என்பதால், சுருளி அருவியில் தர்ப்பணம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும், தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் சுருளி அருவி உற்சாகமாக நீராடிச் சென்றனர்.</p><p>இந்நிலையில், சுருளி அருவிக்கு வருகை தந்த பக்தர்கள் சுமார் 5,000 பேருக்கு ஸ்ரீகாமதேனு அறக்கட்டளை மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது. போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. </p>

Buy Now on CodeCanyon