Surprise Me!

நெல்லையப்பர் கோயிலில் லட்சதீபத் திருவிழா

2026-01-19 2 Dailymotion

<p>திருநெல்வேலி: நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் லட்சதீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.</p><p>திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்சதீபத் விழா தை அமாவாசை அன்று கொண்டாடப்படுகின்றது. பத்து நாட்கள் நடைபெறும் லட்சதீப திருவிழா கடந்த 7 ஆம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவில் 6-ம் திருநாள் மாலையில் தங்க விளக்கு ஏற்றப்பட்டு அன்று முதல் தினமும் தங்க விளக்கிற்கு சிறப்பு வழிபாடுகளும், அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் ஏழுந்தருளியிருக்கும் உற்சவா் நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. </p><p>தை அம்மாவாசை தினமான நேற்று லட்சதீப திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மாலையில் சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் ஏற்றப்பட்டுள்ள தங்க விளக்கிற்கு பூஜைகள் நடைபெற்று ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அங்கிருந்து தீபம் கொண்டு வரப்பட்டு கொடிமரம் முன் அமைந்திருந்த நந்தி விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து உள் சன்னதியில் வெளிப் பிரகாரங்கள் என கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் அகல் விளக்குகளை வரிசையாகவும், பல வடிவங்களிலும் ஏற்றி வைத்தனர். திருக்கோயில் வளாகமே தீபஒளியில் ஜொலித்தது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.</p>

Buy Now on CodeCanyon