Surprise Me!

விசில் ஊதி தவெக தொண்டர்கள் கொண்டாட்டம்

2026-01-22 16 Dailymotion

<p>தேனி: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்று தேனியில் அக் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தமிழக வெற்றி கழகத்திற்கு சட்டமன்றத் தேர்தலில் "விசில்" சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் முதன் முறையாக களமிறங்கும் அந்த கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். இது தொடர்பாக மாநிலம் முழுவதும் அந்த கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இதன் ஒரு பகுதியாக தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை வரவேற்கும் வகையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் த.வெ.க நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்று கூடி விசில்களை ஊதி, பொதுமக்களுக்கு விசில்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். </p>

Buy Now on CodeCanyon