தங்கள் உறவினர்களுடன் தங்கவிடக்கோரி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 23பேர் 5நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5பேர் மயங்கி விழுந்தனர். இன்று இந்த ஐவரின் நிலை பற்றி எதுவுமே அறியக் கிடைக்கவில்லை.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எந்த வித வழக்கு விசாரணையும் இன்றி ஒரு வருடத்துக்கும் மேலாக தமிழக காவல்துறையால் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்தால் எங்களை போன்ற ஆண்களை கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தில் எங்கள் குடும்பத்தினர் தங்களது நகைகளை எல்லாம் விற்று கடும் சிரமத்திற்கிடையே இங்கு அனுப்பி வைத்தனர். ஆனால் எங்களது தாய் தமிழ்நாடு எங்களை கைது செய்து இங்கு வைத்துள்ளது.

எங்களை விடுதலை செய்யாதவரை எங்களின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று உறுதியாய்க் கூறுகின்றனர். தமிழீழப் பற்றாளர்களும், தமிழின உணவாளர்களும் தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் இவர்கள் எதிர் பார்க்கிறார்களாம்.

நன்றி: தமிழ்தேவன் இணையதளம்