நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தென் சூடானுக்கு உத்தியோகமுறை பயணமொன்றை மேற்கொண்டு திரும்பியுள்ளனர்.

எதிர்வரும் யூலை மாதம் தென் சூடான் உத்தியோகபூர்வமாக உலகஅரங்கில் தனிநாடாக அமைய இருக்கின்ற நிலையில தமிழர் பிரதிநிதிகளின் பயணம் அமைந்துள்ளது.

இரு தரப்புக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் அமையப் பெற்றிருந்த இந்த பயணத்தில் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
தென் சுடானின் கட்டுமானங்களின் தேவைகளை கண்டறிந்து ஆய்வினைக் மேற்கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் விரைவில் அமைச்சரைவில் ஆய்வறிக்கையை சமர்பிக்கவுள்ளனர்.