Surprise Me!

5 ஏக்கரில் 7 லட்சம் வருமானம் தரும் வாழை! #Vaazhai #PasumaiVikatan

2020-10-09 2 Dailymotion

வெட்ட வெட்ட வாழை... அது அள்ளித்தரும் வாழ்வை’ - உண்மைதான். இலை, காய் என ஓர் அறுவடையோடு முடிந்துவிடாமல், மறுதாம்பு மூலமும் வருமானம் கொடுக்கும் பயிர், வாழை. அதனால்தான் அது விவசாயிகளின் விருப்பப் பயிராக இருக்கிறது. அந்த வகையில், 10 ஏக்கரில் வாழை பயிரிட்டு நல்ல லாபம் பார்த்து வருகிறார் இயற்கை விவசாயி பிரசன்னா ரெட்டி. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரிலிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள அம்மையப்பநல்லூரில் இருக்கிறது, அவரது தோட்டம். ஒரு காலை வேளையில் தோட்டத்தில் இருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.<br /><br />நிருபர், ஒருங்கிணைப்பு & எடிட்டிங் - துரை.நாகராஜன்<br />வீடியோ - சொ.பாலசுப்ரமணியன்

Buy Now on CodeCanyon